திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி
x
தினத்தந்தி 17 March 2021 4:45 PM IST (Updated: 17 March 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி நடந்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களையும், தங்களது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று விளக்கி கூறினார்.
கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர். பேராசிரியர்கள் பாலு, சேகர், கதிரேசன், செல்வகுமார், அலுவலக கண்காணிப்பாளர் பொன்னுதுரை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் அந்தோணி சகாய சித்ரா செய்து இருந்தார்.

Next Story