ரூ.35 லட்சம் மோசடி வழக்கில் பிடிவாரண்டு: கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த காங்கிரஸ் பிரமுகர் கைது


ரூ.35 லட்சம் மோசடி வழக்கில் பிடிவாரண்டு: கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த காங்கிரஸ் பிரமுகர் கைது
x
தினத்தந்தி 17 March 2021 11:34 AM GMT (Updated: 17 March 2021 11:34 AM GMT)

ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ரஞ்சன்குமார். அமைந்தகரையை சேர்ந்த இவர் மீது சென்னையை சேர்ந்த பிரமுகர் ஒருவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பண மோசடி வழக்கை எழும்பூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணையில் தொடர்ந்து ரஞ்சன்குமார் ஆஜராகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 10-ந் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி வழக்கில் ஆஜராகாமல் இருந்த ரஞ்சன்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அமைந்தகரை போலீசார் ரஞ்சன்குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அருகே அவரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த காங்கிரஸ் பிரமுகர் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story