குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளுக்கு கத்திக்குத்து; தொழிலாளிக்கு வலைவீச்சு
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளுக்கு கத்திக்குத்து; தொழிலாளிக்கு வலைவீச்சுகிழக்கு தாம்பரம் கணபதிபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் செந்தில்குமாரி (வயது 39). இவர் சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் (49). கூலி வேலை செய்து வருகிறார். தம்பதியருக்கு மோனிஷா (18) என்ற மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வந்த அவர் செந்தில்குமாரியுடன் சண்டையிட்டு உள்ளார்.
அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரியை குத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க சென்ற மகள் மோனிஷாவையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story