வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய 100 கிலோ டால்பின்


வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய 100 கிலோ டால்பின்
x
தினத்தந்தி 17 March 2021 7:54 PM IST (Updated: 17 March 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

வேதாரண்யம்:-
வேதாரண்யத்தில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

அரிய வகை உயிரினங்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். வேதாரண்யம் அருகே கடற்கரையையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. டால்பின்கள், ஆலிவர் ரெட்லி ஆமைகள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக வேதாரண்யம் கடலோர பகுதி உள்ளது. 
பல ஆயிரம் மைல் தூரம் கடல்வழி பயணம் மேற்கொள்ளும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் வேதாரண்யம் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இங்கு நிலவும் இயற்கை சூழல் ஆமைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.  அதேபோல வேதாரண்யம் கடல் பகுதியில் டால்பின்களையும் அதிக அளவில் காணலாம். இந்த பகுதியில் டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது அடிக்கடி நடக்கிறது. 

100 கிலோ டால்பின்

இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரையில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று இறந்த டால்பினை கடற்கரையிலேயே புதைத்தனர். கப்பலில் அடிபட்டு இந்த டால்பின் இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

Next Story