திருச்செந்தூரில் அ.ம.மு.க. வேட்பாளர் வடமலைபாண்டியன் வேட்புமனு தாக்கல்
திருச்செந்தூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் வடமலை பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வடமலை பாண்டியன் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தொடங்கியது. இதையொட்டி கட்சி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக வடமலை பாண்டியன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வ.உ.சி திடலில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு உதவி கலெக்டர் தனப்பிரியாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்
அதைத் தொடர்ந்து வேட்பாளர் வடமலை பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2002-ம் ஆண்டு எனது சொந்த ஊரில் விவசாயத்தை தொடங்கி புதுவிதமாக கரும்பு விவசாயம் செய்து வருகிறேன். பெட்ரோலில் முறைகேடு இல்லாமல் நவீன முறைப்படி பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறேன். கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும், எனக்கும் அ.தி.மு.க. துரோகம் செய்தது. அதனால் தான் அம்மா மக்கள் முன்னே்ற கழகத்தில் நான் இணைந்தேன். இந்த தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அனைத்து சமுதாயம் மற்றும் அனைத்து மதத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். திருச்செந்தூர் தொகுதியில் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு தலைவர் லெனின், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் புவனேஸ்வரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் பொன்ராஜ், உடன்குடி அம்மன் டி.நாராயணன், ஆழ்வார்திருநகரி கிழக்கு சேக் தாவுது, மேற்கு ரவி இன்பராஜ், காயல்பட்டினம் நகர செயலாளர் யாசின், பேரூர் கழக செயலாளர்கள் திருச்செந்தூர் முருகேசன், ஆறுமுகநேரி சேகர், கானம் ராமச்சந்திரன், உடன்குடி கோயில்மணி, தென்திருப்பேரை சரவண பெருமாள், ஆத்தூர் முருகானந்தம், நாசரேத் கிங்ஸ்லி ஜார்ஜ், மாவட்ட இணைச் செயலாளர்கள் கீதா ப்ளோரன்ஸ், பாத்திமா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மணத்தி ரவிக்குமார், ஹரி வடமலை பாண்டியன், நகர இணைச் செயலாளர் காளிதாஸ், நகர துணை செயலாளர் பி.வி.சங்கர், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜோசப், நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர் பாலன், நகர இளைஞர் பாசறை செயலாளர் பாலசங்கர், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் இல்லங்குடி, மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் உலகம்மாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இளங்கோ, மாவட்ட மாணவரணி செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செந்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பாஸ், அப்துல் ரகுமான், ராஜா சுல்தான், சமது மூசா, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சார்லஸ், கழக பேச்சாளர் அப்துல் காதர், உடன்குடி விஜயன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கவேல் துரை, மாவட்ட துணை செயலாளர் சதீஷ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செந்தில், உடன்குடி நகர செயலாளர் சித்திரை ராஜ் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
கட்சியில் இணைந்தனர்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தலை மீனவ கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், வேட்பாளர் வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
Related Tags :
Next Story