வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்
ராமநாதபுரம் அருகே உள்ள மஞ்சன மாரியம்மன்கோவில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜபாண்டி வீட்டில் இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வந்து அரிவாளால் வெட்டியும் கம்பால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜபாண்டி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜபாண்டியின் தாய் லெட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ரவிக்குமார் (38), ரகு (32), மாரியப்பன் மகன் வீமாராஜ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள செல்வராஜ் மகன் விக்ரம் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story