உடுமலை வயலில் நாற்று நட்ட மாணவிகள்
உடுமலை வயலில் நாற்று நட்ட மாணவிகள்
போடிப்பட்டி, மார்ச்.18-
உடுமலையை அடுத்த கல்லாபுரம், எலையமுத்தூர், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலையில் தங்கி பயிற்சி பெற்றுவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் விவசாயிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைப்பாதுகாக்கவும், கூடுதல் மகசூல் பெறவும் முடியும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினர்.
மேலும் மாணவிகள் நெல் வயலில் இறங்கி நாற்று நடவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story