4 தொகுதிகளில் 12 பேர் வேட்பு மனுதாக்கல்
4 தொகுதிகளில் நேற்று 12 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
ராமநாதபுரம்,
4 தொகுதிகளில் நேற்று 12 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
தேர்தல்
சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. ராமநாதபுரம் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாக்கு சேகரித்து கொண்டே வந்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். சப்-கலெக்டர் சுகபுத்ராவிடம் வேட்பாளர் ஜி.முனியசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன், தே.மு.தி.க நகர் செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட பகுஜன் திராவிட கட்சி சார்பில் கதைக்குளம் கிராமத்தை சேர்ந்த வில்கல்ம் பெஞ்சமின் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் ஆனிமுத்து தனது ஆதரவாளர ்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
12 பேர் வேட்பு மனு
அவருக்கு மாற்று வேட்பாளராக அவரின் மனைவி தவமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், திருவாடானை தொகுதியில் போட்டியிட மை இந்தியா பார்ட்டி சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தராஜ் என்பவரும், நாம்தமிழர் கட்சி சார்பில் மாற்று வேட்பாளராக ராமநாதபுரம் வெங்கடேசனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
முதுகுளத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட சாயல்குடி ராமச்சந்திரன் மற்றும் மேலராமநதி இமானுவேல்சேகரன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட 2 பேரும், பரமக்குடி தொகுதியில் 2 பேரும், முதுகுளத்தூர் தொகுதியில் 4 பேரும், திருவாடானையில் 4 பேரும் என மொத்தம் 12 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story