கூடலூரில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.4 லட்சம் பறிமுதல்
கூடலூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.4 லட்சம் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் வாகன சோதனையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் பறக்கும் படையின் நிலையான கண்காணிப்பு அலுவலர் ரகு பிரசாத் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்தனர்.
அப்போது ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று நாடுகாணி சோதனைச்சாவடியில் பறக்கும் படையின் நிலையான கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்தபோது, ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மொத்தம் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 500 அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story