பல்கலைக்கழக பஸ் மீது லாரி மோதல்
கொடைக்கானலில் பல்கலைக்கழக பஸ் மீது லாரி மோதியதில் மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் கிராமத்தில் இருந்து கொய்மலர்களை ஏற்றி கொண்டு, கேரள மாநிலம் கொச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை, திருச்சூர் அருகே உள்ள மண்ணூரை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.
பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அன்னைதெரசா பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ் மீது மோதியது.
மேலும் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப், கார் ஆகியவை மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 3 வாகனங்கள் சேதம் அடைந்தன.
அதேநேரத்தில் பல்கலைக்கழக பஸ்சில் பயணம் செய்த 50 மாணவிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து காரணமாக மூஞ்சிக்கல் பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story