உண்டியல் காணிக்கை மூலம் ரூ.13 லட்சம் வருவாய்
நத்தம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.13 லட்சம் வருவாயாக கிடைத்தது.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோவில் கோவில் வளாகத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் அனிதா, செயல் அலுவலர் பாலசரவணன், ஆய்வாளர் வெற்றிவேந்தன், எழுத்தர் முனியாண்டி, திருக்கோவில் பூசாரிகள், வங்கி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 119-ம், 20 கிராம் தங்கமும், 105 கிராம் வெள்ளியும் வருவாயாக கிடைத்தது.
Related Tags :
Next Story