முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 March 2021 11:15 PM IST (Updated: 17 March 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திருப்புவனம்
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்து செல்லுமாறும், முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் அபராதம் வசூல் செய்யவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி அறிவுறுத்தலின் பேரில் திருப்புவனம் நகரில் உள்ள மெயின்ரோடு, நரிக்குடி ரோடு, வைகை ஆற்றங்கரையோரம், நான்குவழிச் சாலை போன்ற பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் சேர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்கள், முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்த விற்பனையாளர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.2100 வசூல் செய்யப்பட்டது. அபராதம் வசூல் செய்தவர்களிடம் இனிமேல் கண்டிப்பாக முக கவசம் அணியுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story