மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 78 மது பாட்டில்கள் பறிமுதல் முதியவர் கைது


மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 78 மது பாட்டில்கள் பறிமுதல் முதியவர் கைது
x
தினத்தந்தி 17 March 2021 5:57 PM GMT (Updated: 17 March 2021 5:57 PM GMT)

முத்துப்பேட்ைட அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 78 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து முதியவர் ஒருவரை கைது செய்தனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மன்னார்குடி துணை தாசில்தார் ஜோதிபாசு மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 78 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை கிராமத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி(வயது60) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story