கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேர் வேட்புமனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேர் வேட்புமனு தாக்கல்
கள்ளக்குறிச்சி
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் வரை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஐ.மணிரத்தினம், இவருக்கு மாற்று வேட்பாளராக இவருடைய மகன் கமலகண்ணன் (31), தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகுமார், இவருக்கு மாற்று வேட்பாளராக இவருடைய மனைவி பவானி ஆகிய 4 பேர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் கழகம் வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்வாணன், இவருக்கு மாற்று வேட்பாளர் சுரேஷ் ஆகிய 3 பேரும், சங்கராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் உதயசூரியன், பா.ம.க. வேட்பாளர் ராஜா, மாற்று வேட்பாளர் ரமேஷ் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாஹிராபானு, அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் கழகம் வேட்பாளர் விமலாமேரி, அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி வேட்பாளர் அருண்கென்னடி , பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சக்திவேல், சுயேட்சை வேட்பாளர் மயிலாம்பாறைமாரி ஆகிய 8 பேரும், உளுந்தூர்பேட்டைதொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஏ.ஜே.மணிகண்ணன், இவருக்கு மாற்று வேட்பாளராக இவருடைய மனைவி கயல்விழி, அ.ம.மு.க. வேட்பாளர் கே.ஜி.பி.ராஜாமணி , இவருக்கு மாற்று வேட்பாளராக இவருடைய மனைவி தீபா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பமேரி ஆகிய 5 பேர் என நேற்று ஒரேநாளில் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 4 தொகுதிகளிலும் இதுவரை 34 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story