பக்தர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


பக்தர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 17 March 2021 11:52 PM IST (Updated: 17 March 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் பறக்கும் படையினர்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருக்கடையூரில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் போலீசார்
இதில் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். மேலும் பாதுகாப்பு பணியில்  போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைக்கின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

Next Story