கோவில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்பு


கோவில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2021 11:53 PM IST (Updated: 17 March 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருேக 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்குச்சாவடி மையத்தை மாற்றி அமைத்ததால் கோவில்கள், வீடுகள், மின்கம்பங்களில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பேரணாம்பட்டு

வார்டு மறு வரையறை 

பேரணாம்பட்டு ஒன்றியம் டி.டி. மோட்டூர் ஊராட்சி சிந்தகணவாய் கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து சிந்தகணவாய் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஓட்டுப்போட்டு வந்தனர். 2019-ம் ஆண்டு குடியாத்தம் தனி தொகுதி இடைத்தேர்தலிலும் அவர்கள் இங்கு வாக்களித்துள்ளனர். அந்த வாக்குச்சாவடி மையத்தில் கமலாபுரம், கவுராப்பேட்டை கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் 700 பேரும் இங்கு வாக்களித்து வந்தனர். 

இந்தநிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக கமலாபுரம் கிராமத்தை வார்டு மறு வரையறை செய்து, தனி வார்டாக ஏற்படுத்தி இங்குள்ள இ-சேவை மையத்தைப் புதிய வாக்குச்சாவடி மையமாக ஏற்படுத்தி, அதில் சிந்தகணவாய் கிராமத்தை இணைத்து, அந்தக் கிராமத்தைச் ேசர்ந்த வாக்காளர்கள் 385 பேர் அங்குச் சென்று வாக்களிக்கும் படி வருவாய்த்துறை அறிவித்திருந்தது.

சமரசம் ஆகாத கிராம மக்கள்

இதையறிந்த சிந்தகணவாய் கிராம மக்கள் தங்கள் ஊரில் இருந்த வாக்குச்சாவடியை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கமலாபுரத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே வாக்களித்து வந்த சிந்தகணவாய் நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கூறி 50-க்கு மேற்பட்டோர் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் சப்-கலெக்டருமான ஷேக் மன்சூரிடம்  கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மனுவை பெற்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூர் அந்தக் கிராம மக்களிடம் இந்தத் தேர்தலில் கமலாபுரம் இ-சேவை அலுவலகம் புதிய வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டுள்ளதால் அங்குச் சென்று அனைவரும் ஓட்டுப்போடுங்கள், பின்னர் மாற்றி அமைக்கப்படும், எனக் கூறினார். அதில் சமரசம் ஆகாத சிந்தகணவாய் கிராம மக்கள் தங்கள் வீடுகள், அங்குள்ள கோவில்கள், மின் கம்பங்களில் கருப்புக்கொடியை ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக ேபனர் அச்சடித்துக் கட்டி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story