குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம் ஆனது.
நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் ரத்தினபுரி காலனி பகுதியை சேர்ந்தவர் யோகலிங்கம் மனைவி ராதிகா (வயது 38). கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராதிகா நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது குடிசை வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக திடிரென்று குடிசையில் தீ பிடித்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அனணக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ மளமளவென்று பரவி குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ற்றும் சமையல் பாத்திரங்கள் உள்பட பல பொருட்கள் நாசமானது. இது குறித்து தகவல் அறிந்து இனுங்கூர் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் ராதிகா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரிசி, பருப்பு மற்றும் சமையல் பொருட்களை் வழங்கினார்.
Related Tags :
Next Story