முக கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்


முக கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 March 2021 12:11 AM IST (Updated: 18 March 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500, அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதல் மீறினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதசூதன் ரெட்டி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று சிவகங்கை வட்டாட்சியர் தர்மலிங்கம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளையராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துசெல்வம், சரவணன், பொன்முனியாண்டி மற்றும் போலீசார் சிவகங்கை நகரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 13 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story