காரைக்குடி பள்ளி மாணவி சாதனை


காரைக்குடி பள்ளி மாணவி சாதனை
x
தினத்தந்தி 18 March 2021 12:11 AM IST (Updated: 18 March 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பள்ளி மாணவி சாதனை

சிவகங்கை
தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் மற்றும் சென்னை மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து சென்னையில் நடந்தது. இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து 200 மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்ற காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி சிறப்பாக விளையாடி மாநிலம் முழுவதும் இருந்து பங்கேற்ற பல முன்னணி வீரர்களை வெற்றி கொண்டு மாநில அளவில் 2-ம் இடம் பெற்றார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மாநில தரவரிசை இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை ராஜராஜேஸ்வரி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை பெற்ற மாணவிக்கு சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழக செயலாளர் டி.எஸ். பாரூக், பயிற்சியாளர்கள் பகவதி ராஜா, வீரபாண்டி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Next Story