கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்


கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 18 March 2021 12:22 AM IST (Updated: 18 March 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்

காரைக்குடி
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. 30 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நேற்று பால்குட திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள்  கோவிலிலிருந்து பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தனர். சிலர் உடலெங்கும் வேல் குத்தி சிறிய தேரை இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் 12 அடி நீள வேலில் அலகு குத்தி காவடி எடுத்து வந்தார். சிலர் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பால்குடம் எடுத்து பக்தர்களின் பால் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ராட்சத அண்டாக்களில் நிரப்பப்பட்டது. பின்பு மின்மோட்டார் மூலம் குழாய் வழியாக கருவறைக்கு கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 12 மணி நேரத்திற்கு மேலாக அம்மனுக்கு தொடர்ச்சியாக அபிஷேகம் நடந்தது. காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.

Next Story