4 தொகுதிகளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
4 தொகுதிகளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட நேற்று 16 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று காரைக்குடி தொகுதியில் ஒருவரும், திருப்பத்தூர் தொகுதியில் 9 பேரும், சிவகங்கை தொகுதியில் 2 பேரும், மானாமதுரை தொகுதியில் 4 பேரும் என மொத்தம் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க. மாற்று வேட்பாளராக சுகனேஸ்வரி, தேர்தல் அலுவலர் சுரேந்திரனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதியில்அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக பில்லூர் ராமசாமியும், நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக வினோதினியும் தேர்தல் அலுவலர் முத்துக்கழுவனிடம் மனுதாக்கல் செய்தனர்.
மானாமதுரை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் சந்திரசேகர், அண்ணா எம்.ஜி.ஆர். மக்கள் கழக வேட்பாளர் முரளிதரன், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மருது அழகுராஜ் நேற்று திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் கவி நாகராஜன், மாவட்ட தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் சிதம்பரம், ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், குணசேகரன், சிவமணி, வடிவேலு, நகர செயலாளர் இப்ராஹீம் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் அ.ம.மு.க. வேட்பாளர் கே.கே. உமாதேவன் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். கே.கே. உமாதேவன் 2 மனுக்களையும், மாற்று வேட்பாளராக வெங்கடேஸ்வரன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் ரகீம் ஆகியோர் உடனிருந்தனர். இதைதொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
Related Tags :
Next Story