பாப்பாரப்பட்டி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி


பாப்பாரப்பட்டி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 18 March 2021 12:36 AM IST (Updated: 18 March 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (வயது 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மூர்த்தி பெங்களூருவில் தங்கி கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நந்தினி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story