குமாரபாளையம் அருகே சாலையை கடந்த ஆட்டோ மீது லாரி மோதி பெண் பலி 5 பேர் படுகாயம்


குமாரபாளையம் அருகே சாலையை கடந்த ஆட்டோ மீது லாரி மோதி பெண் பலி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 March 2021 7:15 PM GMT (Updated: 17 March 2021 7:15 PM GMT)

குமாரபாளையம் அருகே சாலையை கடந்த ஆட்டோ மீது லாரி மோதி பெண் பலி 5 பேர் படுகாயம்

குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சாலைைய கடந்த ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெண் சாவு
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சந்திரா (வயது 58). முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சந்திரா தனது மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சந்திரா பல் சிகிச்சை பெறுவதற்காக வட்டமலைப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரிக்குச் சென்று விட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 
ஆட்டோவை தியாகு என்பவர் ஓட்டினார். ஆட்டோவில் 8-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையை ஆட்டோ கடந்தபோது கோவையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
5 பேர் படுகாயம்
மேலும் ஆட்டோவில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்முடியனூர் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (45), அதே ஊரை சேர்ந்த காளி மனைவி பேபி (35), ஈரோடு ராசாபாளையத்தை சேர்ந்த மோகன் மகன் தானீஸ் (வயது 11), குமாரபாளையம் கே.எஸ். பங்களா வீதியை சேர்ந்த ரவிகுமார் மனைவி லதா (வயது 45), பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாகம்மாள் (65) ஆகிய 5 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்த சிராஜுதீன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
========

Next Story