நகராட்சி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நகராட்சி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2021 12:52 AM IST (Updated: 18 March 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சி தொழிலாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் வேலைநீக்கம் செய்த ஒப்பந்த தொழிலாளிகளை மீண்டும் வேலைக்கு எடுப்பது, மாதம் ஊதியத்தை நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல் பிரதி மாதம் 5-ந் தேதி வழங்குவது, மாவட்ட கலெக்டர் அறிவித்த புதிய சம்பளம் ரூ.410 தேர்தலுக்குப் பிறகு வழங்குவது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story