அரசியல் கட்சியினரின் கொடிகள்-துண்டுகள் விற்பனை மும்முரம்


அரசியல் கட்சியினரின் கொடிகள்-துண்டுகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 18 March 2021 1:23 AM IST (Updated: 18 March 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சியினரின் கொடிகள்-துண்டுகள் விற்பனை நடந்தது.

பெரம்பலூர்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோதுகிறது. மேலும் பெரம்பலூர் தொகுதியில் தே.மு.தி.க., நாம் தமிழர், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வீடு வீடாக தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருவதால் பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதனால் பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசியல் கட்சிகளின் கொடிகள், துண்டுகள் (மப்ளர்கள்), பேட்ஜ்கள், கரை வேட்டிகள், கட்சி தோரணங்கள், கட்சி தலைவர்களின் உருவப்படங்கள் மற்றும் பொன்னாடை ஆகியவை விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. அவைகள் கடைகளுக்கு முன்பு விற்பனைக்காக தொங்கவிடப்பட்டுள்ளதால், அதன் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதனை அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.



Next Story