கல்குறிச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கல்குறிச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 March 2021 1:45 AM IST (Updated: 18 March 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

கல்குறிச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரியாபட்டி, 
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு அளிக்க வலியுறுத்தி கல்குறிச்சி ஊராட்சியில் ரங்கோலி, இருசக்கர வாகன பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம்வழங்கல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் காரியாபட்டி ஒன்றியத்திலிருந்து அனைத்து ஊராட்சி செயலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story