குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 18 March 2021 2:49 AM IST (Updated: 18 March 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக சாலையோரம் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகின்றனர். தற்போது கோடைக்்காலமாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. இந்தநிலையில் குடிநீர் வீணாக செல்வதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். எனவே குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story