தலைவாசல் அருகே வாகன சோதனை: முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த பெண் கைது
தலைவாசல் அருகே தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த பெண் சிக்கினார்.
தலைவாசல்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஒரு பெண்ணை இறக்கி விட்டுவிட்டு அவர் தப்பி சென்று விட்டார். தேர்தல் அலுவலர்கள் அந்த பெண்ணை விசாரித்த பின்னர் வீரகனூர் போலீசில் ஒப்படைத்தனர்.வீரகனூர் போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், பிடிபட்ட பெண் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி அஞ்சலை (வயது 30) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கடந்த மாதம் 3-ந்தேதி வீரகனூர் ராயர்பாளையத்தில் விவசாயி தீபன், குமரன் ஆகியோர் வீடுகளில் 27 பவுன் நகை, ரூ.1.76 லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த அவரிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம், தங்கராஜ், துரை, அலமேலு ஆகியோரை திருக்கோவிலூர் போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story