சேலம் மாவட்டத்தில் 56 பேர் வேட்புமனு தாக்கல்


சேலம் மாவட்டத்தில் 56 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 18 March 2021 3:55 AM IST (Updated: 18 March 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
4-வது நாள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று 4-வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. கெங்கவல்லி சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அமுதனிடம் மனுதாக்கல் செய்தார்.
ஆத்தூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணவேணி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஏற்காடு சட்டமன்ற தொகுதியில பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராமசாமி வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஓமலூர், மேட்டூர்
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் இந்திரா காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஞ்சய்காந்தி மற்றும் அ.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சைகள் உள்பட 10 பேர் தேர்தல் அதிகாரி கீதாபிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மேட்டூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சதாசிவம், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக், மை இந்தியா பார்ட்டி வேட்பாளர் ராசப்பன், அகில இந்திய தொழிலாளர்கள் மக்கள் பார்ட்டி வேட்பாளர் செல்லமுத்து ஆகியோர் தேர்தல் அதிகாரி சரவணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சங்ககிரி தொகுதி
சங்ககிரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்லமுத்து உள்பட 6 பேர் தேர்தல் அதிகாரி வேடியப்பனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சேலம் மேற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் தியாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சேலம் வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இமயஈஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மகேஸ்வரி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சேலம் தெற்கு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முரளி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தினேஷ்பாலாஜி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியம்மா, மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மணிகண்டன் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். இதே போன்று சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் நேற்று 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Next Story