தென்காசி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. சொத்து விவரம்


தென்காசி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. சொத்து விவரம்
x
தினத்தந்தி 17 March 2021 10:51 PM GMT (Updated: 17 March 2021 10:51 PM GMT)

தென்காசி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வின் சொத்து விவரம் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி:
தென்காசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தனது வேட்புமனுவில் தனக்கும், தனது மனைவிக்கும் உள்ள சொத்து விவரத்தை குறிப்பிட்டு உள்ளார். அதன்படி அவர் தனக்கு ரூ.3 கோடியே 44 லட்சத்து 31 ஆயிரத்து 73 மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.33 லட்சத்து 69 ஆயிரத்து 732 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், கடன்கள் ரூ.1 கோடியே 52 லட்சத்து 527-ம், கையிருப்பு ரொக்கமாக ரூ.1½ லட்சமும் இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் தனது மனைவி பெயரில் ரூ.43 லட்சத்து 99 ஆயிரத்து 974 மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.57 லட்சத்து 42 ஆயிரத்து 34 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், கையிருப்பு ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், கடன்கள் ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 130-ம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். 

Next Story