கடையநல்லூரில் வேட்புமனு தாக்கல் செய்ய தள்ளுவண்டியில் வந்த பெண் வேட்பாளர்
கடையநல்லூரில் வேட்புமனு தாக்கல் செய்ய பெண் வேட்பாளர் ஒருவர் தள்ளுவண்டியில் வந்தார்.
அச்சன்புதூர், மார்ச்.18-
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இந்து தேசிய கட்சியை சேர்ந்த ராஜி (வயது 26) என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஆய்க்குடி பகுதியை சேர்ந்த இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தள்ளுவண்டியில் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் ராஜி கூறும்போது, ‘பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டிக்கும் வகையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய தள்ளுவண்டியில் வந்தேன். மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கொள்கையற்ற கூட்டணி வைத்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் இவ்வாறு வந்தேன்’ என்றார்.
Related Tags :
Next Story