எந்திரத்தில் சிக்கி விரல்கள் துண்டானதால் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


எந்திரத்தில் சிக்கி விரல்கள் துண்டானதால் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 4:44 AM IST (Updated: 18 March 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

எந்திரத்தில் சிக்கி விரல்கள் துண்டானதால் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிபால் தாஸ் (வயது 28). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 

கடந்த ஜனவரி மாதம் ஹரிபால்தாஸ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது வலது கை எந்திரத்தில் சிக்கியது. இதில் அவருக்கு 2 விரல்கள் துண்டானது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் அவர் மனமுடைந்து வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story