4-வது நாளாக சூறாவளி பிரசாரம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை மலர் தூவி வரவேற்ற பெண்கள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கடந்த 12-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்,
அதன்படி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். தற்போது, இவர் திண்டுக்கல் தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், அடுத்து ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் 4-வது நாளான நேற்று திண்டுக்கல் மாநகராட்சி 42, 43, 44, 45, 46-வது வார்டு பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில், பாவேந்தர் நகர், அன்னை வேளாங்கண்ணி தெரு, செபஸ்தியார் கோவில், ஆடி நாட்டாமை காம்பவுண்டு, அசனாத்புரம், சவேரியார்பாளையம் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து அமைச்சர் வாக்குசேகரித்தார்.
அப்போது, திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு அடிப் படை தேவைகளான சாலை, தெருவிளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் ஆகியவை கிடைக்க சட்டமன்ற உறுப் பினர் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுத்தேன். இதன் காரணமாக திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி யுள்ளது. பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதி களையும் கட்டாயம் செய்து கொடுப்போம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இணையதள டேட்டா வழங்குதல், அரசு கேபிள் இலவசமாக வழங்குதல், நகர பஸ்களில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் ஆகியவற்றை கூறலாம் என்றார்.
முன்னதாக சவேரியார் பாளையத்தில் அமைச்சர் வாக்குசேகரிப்பில் ஈடுபட சென்ற போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். இது தொண்டர் களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பிரசாரத்தின் போது அ.தி.மு.க. அமைப்பு செய லாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன், அ.தி.மு.க. பகுதி கழக செயலாளர்கள் சேசு, சுப்பிரமணி, மோகன், முரளி மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
Related Tags :
Next Story