ஒட்டன்சத்திரம் தொகுதியை 25 ஆண்டுகளாக தக்கவைத்திருக்கும் அர.சக்கரபாணி தொடர் வெற்றிக்கு மக்கள் ஆதரவு
ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் 1996 முதல் போட்டியிட்டு அடுத்தடுத்து நடந்த ஐந்து தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று கடந்த 25 ஆண்டுகளாக தொகுதியை தக்கவைத்திருக்கிறார் அர.சக்கர பாணி.
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் தொகுதி என்றுமே தி.மு.க.வின் பக்கம் தான் எனும் அளவுக்கு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தள்ளது. 1996ம் ஆண்டு முதன் முதலில் தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த அர.சக்கரபாணி அன்று தொடங்கிய அவரின் வெற்றிப்பயணம் கடந்த ஐந்து தேர்தல்களில் தொடர்கிறது.
1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட விவசாய சங்க தலைவர் செல்லமுத்துவை எதிர்த்து வெற்றிபெற்றார். இதையடுத்து 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் தி.மு.க. 3 தொகுதிகளில் மற்றுமே வெற்றி பெற்றது. அதில் ஒருவராக அர.சக்கர பாணி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.டி.செல்லச் சாமியை எதிர்த்து வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட நல்லசாமியை எதிர்த்து அர.சக்கரபாணி வென்றார்.
இவரது தொடர் வெற்றியை கண்ட தி.மு.க. தலைமை இவருக்கு அரசு கொறடா பதவி வழங்கியது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தோற்கடித்தார். 2016-ல் அ.தி-.மு.க.வை சேர்ந்த கிட்டுசாமியை வென்றார்.
அப்போதைய தேர்தலில் இவர் 65 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்ததாகும்.
’அர.சக்கரபாணியை போல் நமது எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் இருந்துவிட்டால் நிரந்தரமாக நமது ஆட்சி தான்’ என தி.மு.க. தலைவர் கருணாநிதியே பாராட்டியதாக கூறுவதும் உண்டு.
அந்த அளவிற்கு தொகுதி மக்களுடன் ஈடுபாட்டுடன் பழகிஅவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.செயலாளராகவும், தி.மு.க. கொறடாவாகவும் கட்சி பொறுப்பில் உள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் நடக்கும் சாதாரண மக்களின் வீட்டு விசேஷங்களுக்கு கூட இவர் ஆஜராகிவிடுவார். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர் மீது நன்மதிப்பு வைத்துள்ளனர். தொகுதியில் துக்க நிகழ்ச்சி குறித்து தகவல் கிடைத்தால் அவர்கள் வீடுகளுக்கு சென்றுவிசாரித்துவிட்டு வருவார் தொகுதி மக்களின் நல்லது கெட்டது என குடும்ப நிகழ்வுகளிலும் பங்கேற்று மக்களின் மனதில் இடம்பிடித்து வைத்துள்ளார்.
ஆளுங்கட்சியாக இருந்த போது கொத்தயம் உள்ளிட்ட கிராமப்புற மக்களின் வறட்சியை போக்க நல்லதங்காள் நீர்தேக்க திட்டத்தை கொண்டு வந்தார். கிராமப்புற சாலைகளுக்கு முக்கித்துவம் கொடுத்து சாலை வசதிகள் செய்து கொடுத்தார்.
பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது. வாகறை பகுதியில் மக்காச் சோளம் ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளார். ஒட்டன்சத்திரம் மக்களின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர பொள்ளாச்சி பரப்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு முதற்கட்டமாக ஆய்வுப்பணிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 530 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு கழக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே நடை பெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எனக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவளித்து மாபெரும் வெற்றிபெற செய்யவேண்டும் என வாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார். திண்டுக்கல் மாவட் டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த எம்.எல்.ஏ.ஆண்டி அம்பலம் நத்தம் தொகுதியில் 1977 முதல் 1999 வரை தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 22 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை புரிந்தார்.
இவரது சாதனையை, தற்போது ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து அர.சக்கரபாணி முறியடித்துள்ளார். இம்முறையும் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று ஒட்டன்சத்திரம் தொகுதியை தக்க வைத்துக்கொள்வார் என்பதில் ஐயமில்லை.
Related Tags :
Next Story