மண்ணச்சநல்லூர் தொகுதியில் பிரசாரத்தின் போது வாலிபர்களுடன் கிரிக்கெட் விளையாடிய தி.மு.க.வேட்பாளர் எஸ்.கதிரவன்
மண்ணச்சநல்லூர் தொகுதியில் பிரசாரத்தின் போது வாலிபர்களுடன் தி.மு.க.வேட்பாளர் எஸ்.கதிரவன் கிரிக்கெட் விளையாடினார்.
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று உதயசூரியன் சின்னத்திற்காக பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து நெசவாளர் காலனி, ராசாம்பாளையம், கீழூர், இடையபட்டி, அய்யம்பாளையம், அண்ணா நகர், பாலக்காடு வடக்கு, பாலக்காடு தெற்கு, தோப்புக்கரணம் பண்ணை, நெடுங்குளம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து வேட்பாளர் எஸ்.கதிரவனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு அவர், உங்களது கோரிக்கைகள் அனைத்தும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும், இப்பகுதியில் குடிநீர் வசதி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான தனிப்பாதை, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
பின்னர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்காடு ஊராட்சி பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர்களுடன் சென்று தானும் பேட்டை பிடித்து கிரிக்கெட் விளையாடி வாக்குகள் சேகரித்தார். பிரசாரத்தின் போது, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கருணைராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story