போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: “தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் செல்லாத நோட்டு” - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு


போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: “தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் செல்லாத நோட்டு” - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு
x
தினத்தந்தி 22 March 2021 1:54 PM IST (Updated: 22 March 2021 1:54 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும், அ.தி. மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் போடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தேனி, 

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-&வது முறையாக களம் காண்கிறார்.

போடி சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம், எஸ்.பி. எஸ். காலனி, சீலையம்பட்டி, கோட்டூர், தர்மாபுரி, பூமலைக் குண்டு, மல்லையகவுண்டன் பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி ஆகிய ஊர்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது ஓ.பன்னீர் செல்வம் பேசிய தாவது:-

தமிழக மக்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு திட்டமும் பார்த் துப் பார்த்து செய்யப்படுகிறது. இதில் நமது மாநிலத்துக்கு கொண்டு வந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை  திட்டமும் ஒன்று. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற வில்லை என்று ஸ்டாலின் கூறினார். இன்று (நேற்று) நான் மதுரை விமான நிலையத்தில் இருந்து வரும் போது அந்த எய்ம்ஸ் மருத்துவ மனை வளாகம் அமைய உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி முழுவதுமாக சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு  உள்ளே சமன் செய்யப்பட்டு வருகிறது .
நமது வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. நான் முதல்-அமைச்சராக இருந்த போது 10 லட்சம் பேர் சென்னை மெரினாவில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி போராட்டம் நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து நான் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு கோரிக்கை வைத்தேன். என்னை ஒருநாள் முழுவதும் அங்கேயே இருக்க வைத்து, ஒரே நாளில் 4 அரசாணைகள் பெற்றுத் தந்தார். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கிய பெருமை பிரதமர் நரேந்திர மோடி யையே சேரும்.

கடந்த 2016-&ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். அனைத்து  குடும்பங்களுக்கும் விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி விட்டோம்.

கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க. சொன்னது.  ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை.  இந்த தேர்தலின் போதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை கொடுத் துள்ளது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் செல்லாத நோட்டு. நம்முடைய வாக்குறுதிகள் நல்ல நோட்டு. 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும்,  படித்து பட்டம் பெற்ற பெண் களுக்கான திருமண நிதி உதவியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவோம். முதியோர் உதவித்தொகை ரூ.1,000-&ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கு வோம். விலையில்லா வாஷிங் மெஷின் தருவோம். சொன்னதை நாம் செய்வோம் செய்வதை தான் நாம் சொல்வோம்.

கோட்டூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் கள். நிச்சயம் அதற்கான அரசாணை பெற்றுக் கொடுத்து ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், பா.ஜனதா, பா.ம.க., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத் துக்கு சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

Next Story