பழனி கிராம பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சூறாவளி பிரசாரம்
பழனி சுற்று வட்டார கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பழனி,
பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் இ.பெ. செந்தில்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அ.கலையம் புத்தூர், பெத்தநாயக்கன் பட்டி, சித்திரைக்குளம், சின்னக்கலையம்புத்தூர், தாமரைக்குளம், காவலப் பட்டி, பொந்துப்புளி, பெரியம் மாபட்டி, அருவங்காடு, சண்முகம்பாறை, பொருந்தல், ஒட்டணைப்புதூர், புலிக் கோட்டையூர், கரிக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட் டார்.
பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் வரவேற்றனர். அதோடு அந்த பகுதி இளைஞர்கள், பெண்கள் என பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்த பிரசாரத்தின்போது இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. காலம் காலமாக விவசாயிகளின் பிரச்சினை களை கையாண்டு வருவதால் எப்போதும் விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும். பழனி அருகே பாப்பம்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க சிலர் உரிமம் பெற்றுள்ளனர். மக்கள் நலனுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த தொழிற்சாலைகளையும் தி.மு.க. எதிர்க்கும். அந்த வகையில் பாப்பம்பட்டி விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் எதிர்க்கும் தொழிற் சாலை அமைக்கப்பட மாட்டாது.
பழனி கிராம பகுதிகளில் போதிய சாலை வசதி இல்லாத பகுதிகளிலும், சேதமடைந்து காணப்படும் சாலைகளும் சீரமைக்கப்படும். மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். மளிகை உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலை யேற்றத்துக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வே முக்கிய காரணமாகும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த வுடன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படும். அதற் கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க தேர்தல் அறிக்கை யில் இந்த பெட்ரோல் விலையேற்றம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனவே மக்கள் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதேபோல் நாள்தோறும் உயர்ந்து வரும் கியாஸ் விலை ஆட்சியில் இருந்தபோது குறைக்காத அ.தி.மு.க அரசு, ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர்கள் இலவசமாக தருவதாக அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது. அ.தி.மு.க அரசு மக்களை முட்டாளாக்க பார்க்கிறது. மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story