மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும் இலவச வாசிங்மிஷின் - வேட்பாளர் சையதுகான் உறுதி


மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும் இலவச வாசிங்மிஷின் - வேட்பாளர் சையதுகான் உறுதி
x
தினத்தந்தி 22 March 2021 2:18 PM IST (Updated: 22 March 2021 2:18 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பெண் களின் வேலை பளுவை குறைக்க ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவசமாக வாசிங்மிசின் வழங்கப்படும் என்று கம்பம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சையதுகான் உறுதி அளித்துள்ளார்.

உத்தமபாளையம், 

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சையதுகான் நேற்று 4&ம் நாளாக கம்பம் ஒன்றியப் பகுதியான அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் திறந்த வேனில் வீதிவீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அவருக்கு பொது மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, அ.தி.மு.க ஆட்சியில் துணை முதல்& அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சியால் தேனி மாவட்ட பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி படிக்கும் வகையில் அரசு பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்ட மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று உயர்கல்வி படிக்கும் நிலை இனி இல்லை. தேனி மாவட்டத்திலேயே உயர்  கல்வி படித்துக்கொள்ளலாம். 

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கட்டித்தரப்படும். அதுமட்டுமின்றி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும்.மாணவ&மாணவியர்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், ஒவ்வொரு குடும் பத்திற்கும் வருடத்துக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களின் வேலை பளுவை குறைக்க ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவசமாக வாசிங்மிசின் வழங்கப்படும்.மக்களின் நலன் காக்கும் அரசாக ஜெயலலிதா அரசு விளங்குகிறது.நாங்கள் செய்வதை தான் சொல்லுவோம் .சொல்லு வதை கண்டிப்பாக நிறை வேற்றுவோம். 

கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.மூன்றாவது முறையாக அ.தி.முக. அரசு ஹாட்ரிக் வெற்றி பெறும்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் களஞ்சியமாக விளங்குகிறது.இந்தப் பகுதியில் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரக நெல்களை பயிரிடும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உத்தமபாளையத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு சையதுகான் பேசினார்.கம்பம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஜக்கையன், கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி, உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story