அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அ.தி.மு.க. அரசின் சாதனை களை கூறி கிறிஸ் தவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீதி, வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். 8-வது நாளான நேற்று மாநகராட்சி 17, 18, 20-வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட கக்கன் நகர், நாகல்புதூர் 5-வது தெரு, போடிநாயக்கன்பட்டி, சுக்கா மேடு, தெய்வசிகாமணிபுரம், ஆரோக்கியமாதா தெரு, கவடக்கார தெரு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
சுக்கான்மேடு பகுதியை சேர்ந்த பொது மக்கள் அமைச்சரை மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள செபஸ்தியார் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்திய அமைச்சர், அங்குள்ள கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு கால சாதனைகளையும், தேர்தல் அறிக்கைகளையும் அமைச்சர் எடுத்துக்கூறினார்.
இதை தொடர்ந்து திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்துக்கு சென்று கிறிஸ்தவர்களிடம் அமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது தலைமை போதகர் டேவிட்பால் ஜேக்கப்புக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அதன் பின்னர் போடி நாயக்கன்பட்டியில் அமைச் சர் பிரசாரம் செய்தார். அப்போது, அ.தி.மு.க. அரசு எப்போதுமே சொல்வதை செய்யும் அரசு. ஆனால் தி.மு.க.வினரோ சொல்வதை எதையும் செய்வதில்லை. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதையே வாடிக் கையாக வைத்துள்ளனர். ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருகிறோம். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகள் அவற்றில் சில. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி ,சேசு, முரளி மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
Related Tags :
Next Story