இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்
இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது
கோவை
இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
பொதுக்கூட்டம்
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் நேற்று அந்த கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது
"நாங்கள் அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை. எங்களுக்கு இது தொழில் அல்ல, கடமையை செய்ய வே அரசியலுக்கு வந்துள்ளோம்.இங்கே பாழ்பட்டு கிடக்கும், மண், மொழி, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும்.
மக்களுக்கான போராட்டங்களில் நின்றிருக்கிறோம், கிராம சபைகளை மீட்டெடுப்போம். காலில் விழும் கலாசாரம் எங்களுக்கு கிடையாது.
இலவசம் ஏழ்மையை ஒழிக்காது
எங்களின் தேர்தல் அறிக்கை உண்மையான தேர்தல் அறிக்கை. இலவசங்கள் கொடுத்து, மறக்கடிக்கும் வேலை எங்களுக்கு இல்லை. இலவசம் கொடுப்பதால் ஏழ்மையை ஒழித்து விட முடியாது.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று நான் கூறியதை இப்போது காபி அடித்துள்ளனர். கடந்த, 40 ஆண்டுகளாக ரத்ததானம் செய்கிறோம். எங்களுக்கு உறவு தமிழகம் முழுவதும் இருக்கிறது.
லோக் அயுக்தா
ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லோக் ஆயுக்தா சட்டத்தை பல்லை பிடுங்கி வைத்திருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த சட்டத்திற்கு வலு சேர்ப்போம்.
எங்கள், நோக்கம் இலவசங்கள் தருவதை தடுப்பது அல்ல, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே ஆகும். வறுமை கோட்டிற்கு கொண்டு செல்வது நோக்கம் அல்ல, செழுமை போக்கிற்கு மேலே உங்களை கொண்டு செல்ல வேண்டும்.
கிராமங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க "மக்கள் கேன்டீன், உருவாக்கப்படும். ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று, அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். பணம் கொடுத்து சீட்டு வாங்குபவர்கள் 30 கோடி ரூபாய் செலவு செய்தால், 60 கோடி ரூபாயை சுருட்டுவதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் வேலாண்டிபாளையம், வடவள்ளி, சீரநாயக்கன்பாளையம், என்.எஸ்.ஆர். ரோடு, கே.கே.புதூர், கண்ணப்ப நகர், காந்தி மாநகர் ஆகிய இடங்களில் வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story