கூடலூர் வனக்கோட்டத்தில் மனித வனவிலங்கு மோதல்களை தடுப்பது குறித்த கருத்தரங்கு


கூடலூர் வனக்கோட்டத்தில் மனித வனவிலங்கு மோதல்களை தடுப்பது குறித்த கருத்தரங்கு
x
தினத்தந்தி 22 March 2021 3:40 PM IST (Updated: 22 March 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வனக்கோட்டத்தில் மனித வனவிலங்கு மோதல்களை தடுப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கூடலூர்

கூடலூர் வனக்கோட்டத்தில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கு

கூடலூர் வனகோட்டம் சார்பில் நாடுகாணி வனச்சரகத்தில் உள்ள ஜீன்பூல் பூங்காவில் மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கூடலூர் வன அலுவலர் கொம்மூ ஓம்கார் தலைமை தாங்கினார். 

ஊட்டி அரசு கலை கல்லூரி விரிவுரையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஜம்போ ரேடர் குறித்த பயிற்சியை தார்ஷ், யானை வலசை போகும் பாதை பற்றி மோகன்ராஜ் ஆகியோர் விளக்கி பேசினர். 

தொடர்ந்து விலங்குகளின் பிரேத பரிசோதனை பற்றிய தகவல்களை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், கோவை கல்லூரி மாணவர்களின் புதிய படைப்பான யானைகளின் ஆன்ட்ராய்ட் ஆப் பற்றி வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மனித-வனவிலங்கு மோதல்

பின்னர் கூடலூர் வன அலுவலர் கொம்மூ ஓம்காரம் கூடலூர் பகுதியில் நிலவும் மனித-வனவிலங்கு மோதல்களை பற்றி பேசினார். தொடர்ந்து உலக சிட்டு குருவி தினத்தையொட்டி சிட்டுகுருவியின் வாழ்க்கை முறைகளும், அதை அழிவில் இருந்து காப்பாற்றும் முறைகள் குறித்து நாடுகாணி வனச்சரகர் பிரசாத் பேசினார்.

பின்னர் வன அலுவலர் கொம்மூ ஓம்காரம் சிட்டு குருவிகளின் வாழ்விடத்தை அதிகரிக்கும் வகையில் மரங்களில் செயற்கை கூடுகளை கட்டி வைத்தார். நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் ஆனந்த், கலைவேந்தன் உள்பட வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் உலக வன நாள் ஜீன்பூல் வளாகத்தில் நேற்று கொண்டாடப்ட்டது. இதையொட்டி வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் அயனி, அத்தி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து வனத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுக்க பட்டது.

Next Story