புதுச்சத்திரம் அருகே தி.மு.க. வேட்டி, துண்டுகள் பறிமுதல்


புதுச்சத்திரம் அருகே தி.மு.க. வேட்டி, துண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 March 2021 3:42 PM IST (Updated: 22 March 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே தி.மு.க. வேட்டி, துண்டுகள் பறிமுதல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 54 பறக்கும் படை குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாத்திரிபுரம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தி.மு.க. கரை போட்ட 47 வேட்டிகள் மற்றும் 8 துண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காரில் வந்த நபர்களிடம் விசாரணை செய்தபோது கண்ணூர்பட்டியில் இருந்து வேலகவுண்டம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story