1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 March 2021 3:42 PM IST (Updated: 22 March 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம்

நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் விளங்குகிறது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதை வழியாக இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்கிறார்கள். 

அவ்வாறு அவர்கள் செல்லும்போது பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், மதுபாட்டல்கள் ஆகியவற்றை சாலை ஓரத்தில் வீசி செல்கிறார்கள். 

இதனால் வனச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளின் உயிரிழப்புக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே இந்த கழிவுகளை அகற்ற வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோடு வனசோதனை சாவடி அரகே தொடங்கிய நிகழ்ச்சியை வனச்சரக அதிகாரி பழனிராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வனவர் குணசேகரன் வரவேற்றார். 

அங்கிருந்து 6 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இருபுறத்திலும் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் அகற்றினார்கள்.

 இதில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்கள் அகற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் வனவர் சுரேஷ் நன்றி கூறினார். 


Next Story