திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர கட்டமைப்பு சார்பில், ‘சுயமரியாதையை வளர்ப்பதன் மூலம் தன்னை அறிதல்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர், ஆசிரியர்களுக்கு பல்வேறு செயல்விளக்க பயிற்சிகளும் அளித்து விளக்கவுரை ஆற்றினார். பேராசிரியர்கள் வேலாயுதம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் ஷோலா பர்னாந்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story