திருவண்ணாமலை; விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை வேளாண் இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் தலைமுடியை வெட்டி கொள்வது போன்றும், பொம்மை கார், லாரி போன்றவற்றை கயிறால் கட்டி இழுத்தும் நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை உயர்த்தி வழங்குவதாக அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வாக்குறுதி அளிக்க வேண்டும்.
அரசு கட்டிடங்கள் கட்டுவதில் டெண்டர் விட்டு பணி செய்யாமல் அரசே பணி ஏற்று நடத்தி இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டும்.
பிரதமர் கிசான் நிதி ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதுபோல் முதல்- அமைச்சர் கிசான் நிதி ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஓய்வுகால பலன் ரூ.1 லட்சம் வீதம் ஆண்டுக்கு 5 லட்சம் உழவர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story