மாவட்ட செய்திகள்

முள்ளக்காடு அருகேவாலிபரை கத்தியால் தாக்கியஅண்ணன், தம்பி மீது வழக்கு + "||" + a case has been registered against a brother who attached yougster knife near mullakkadu

முள்ளக்காடு அருகேவாலிபரை கத்தியால் தாக்கியஅண்ணன், தம்பி மீது வழக்கு

முள்ளக்காடு அருகேவாலிபரை கத்தியால் தாக்கியஅண்ணன், தம்பி மீது வழக்கு
முள்ளக்காடு அருகே வாலிபரை கத்தியால் தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் செல்வகுமார் (வயது 18). இவர் முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கே இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, அதில் இருந்த முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் சதீஷ் (24) மற்றும் அவரது அண்ணன் சுதாகர் (26) ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து செல்வகுமார் அவருடைய அண்ணன் சரத்குமாருடன் சென்று இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் செல்வகுமாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
காயமடைந்த செல்வகுமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணன், தம்பிகளான சுதாகர், சதீஷ் ஆகியோர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடுவாஞ்சேரி அருகே அண்ணன், தம்பி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே அண்ணன், தமபி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.