மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் 33 பேர் போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் 33 பேர் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் 33 பேர் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை தொகுதியில் 17 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 3 பேர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனால் 14 பேர் போட்டியில் உள்ளனர்.
சீர்காழி-பூம்புகார்
சீர்காழி சட்டசபை தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 2 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 10 பேர் களத்தில் உள்ளனர்.
பூம்புகார் தொகுதியில் 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 2 பேர் வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில் 9 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
வேட்பாளர்கள் இறுதி பட்டியல் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை
1. பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி) - சித்தமல்லி பழனிசாமி.
2. காங்கிரஸ் ( தி.மு.க. கூட்டணி) - ராஜகுமார்.
3. அ.ம.மு.க. - கோமல் அன்பரசன்.
4. நாம் தமிழர் கட்சி - காசிராமன்.
5. மக்கள் நீதி மய்யம் - ரவிச்சந்திரன்.
6. பகுஜன் சமாஜ் கட்சி - சம்சுதீன்.
7. தமிழ்நாடு இளைஞர் கட்சி - ராஜ்குமார்
8. சுயேச்சை - கணேசன்
9. சுயேச்சை- லோகசம்பத்
10. சுயேச்சை- தீமோத்தேயு
11. சுயேச்சை- நிரஞ்சன்
12.சுயேச்சை- பாபுசங்கர்
13.சுயேச்சை- மணிமாறன்
14.சுயேச்சை- ராஜேந்திரன்
சீர்காழி
1.அ.தி.மு.க. - பி.வி.பாரதி.
2.தி.மு.க. - வக்கீல் எம். பன்னீர்செல்வம்.
3.அ.ம.மு.க. - பொன்.பாலு.
4.நாம் தமிழர் கட்சி - கவிதா அறிவழகன்.
5.சமத்துவ மக்கள் கட்சி - பிரபு.
6.பகுஜன் சமாஜ் கட்சி - ஸ்ரீதர்.
7.அனைத்து மக்கள் அரசியல் கட்சி- கம்பன்.
8. சுயேச்சை- அனுசுயா.
9. சுயேச்சை- சிலம்பரசன்.
10. சுயேச்சை- பாரதி.
பூம்புகார்
1.அ.தி.மு.க. - எஸ்.பவுன்ராஜ்.
2.தி.மு.க. - நிவேதா எம்.முருகன்.
3. அ.ம.மு.க. - செந்தமிழன்.
4. மக்கள் நீதி மய்யம் - மெஹாராஜிதீன்
5. நாம் தமிழர் கட்சி - காளியம்மாள்.
6.பகுஜன் சமாஜ் - இளஞ்செழியன்.
7. சுயேச்சை - கலைவாணன்.
8. சுயேச்சை - பாண்டியராஜன்.
9. சுயேச்சை - முருகன்.
Related Tags :
Next Story