‘பிரஷர் குக்கர்' சின்னத்துக்கு வாக்குகள் சேகரிப்பு; ‘ஜெயலலிதா ஆட்சி அ.ம.மு.க வில் மலரும்’ என்கிறார் தியாகராயநகர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன்


‘பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் சேகரிப்பு; ‘ஜெயலலிதா ஆட்சி அ.ம.மு.க வில் மலரும்’ என்கிறார் தியாகராயநகர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன்
x
தினத்தந்தி 22 March 2021 10:15 PM IST (Updated: 23 March 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

வீதி வீதியாக மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார் தியாகராயநகர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன்.

பிரஷர் குக்கர்' சின்னத்துக்கு வாக்குகள் சேகரிப்பு ஜெயலலிதா ஆட்சி அ.ம.மு.க வில் மலரும்’ என்கிறார் சென்னை தியாகராயநகர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார், ஆர்.பரணீஸ்வரன். இளைஞரான இவர், தொகுதிக்கு புதியவரும் கூட. ஆனாலும் இளமைக்கே உரிய வேகத்தோடு தொகுதி முழுவதும் வீதி வீதியாக மோட்டார் சைக்கிளில் வலம் வந்து ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார். அடிப்படை தேவைகளை எப்படி தீர்ப்பது? அ.ம.மு.க.வின் செயல்பாடு என்ன? என்பது குறித்தும் பிரசாரத்தின்போது மக்களிடையே அவர் எடுத்துரைத்து வருகிறார். 

காலை, மாலை என தீவிரமாக தொகுதியில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக தாயார், மனைவி, உறவினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன், தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. உள்பட கூட்டணி-தோழமை கட்சியினரும் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். செல்லும் வழியெங்கும் அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். இதுகுறித்து அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன் கூறுகையில், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். செல்லும் இடமெல்லாம் அ.ம.மு.க.வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரஷர் குக்கர் சின்னத்தை மக்கள் விரும்புகிறார்கள்’’, என்றார். 

தியாகராயநகர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பரணீஸ்வரன் பொதுமக்களுக்கு அளித்து வரும் வாக்குறுதிகள் வருமாறு:- 

* அ.ம.மு.க. ஆட்சியில் தமிழக வேலைவாய்ப்புகளில் 85 சதவீதம் தமிழர்களுக்கு வழங்கப்படும். 
* நீட் தேர்வு இல்லாத மருத்துவப்படிப்பு சாத்தியமாகும். 
* இயற்கை வேளாண்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்படும். 
* அனைத்து தொகுதிகளிலும் மாதம் 4 முறை குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். 
* பெண்கள், மாணவர்களுக்கு அதிக சலுகைகள் தரப்படும். 
* சிறு வியாபாரிகள் மற்றும் சிறுதொழில் புரிவோருக்கு கடன் சலுகை. 
* வீட்டில் இருந்து ஒருவருக்கு வேலைவாய்ப்பு.

Next Story