கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.44 லட்சம் பறிமுதல் கலெக்டர் கிரண்குராலா தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.44 லட்சம் பறிமுதல் கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 22 March 2021 10:22 PM IST (Updated: 22 March 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.44 லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி  மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

24 மணி நேரம் கண்காணிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வினியோகிப்பது மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம் மற்றும் இதர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ரூ.44 லட்சம் பறிமுதல்

இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 93 ஆயிரத்து 110, ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்து 800, சங்கராபுரம் தொகுதியில் ரூ.10 லட்சத்து 93 ஆயிரத்து 850, கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.44 லட்சத்து 67 ஆயிரத்து 760 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உளுந்தூர்பேட்டை தொகுதியில் ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 790, சங்கராபுரம் தொகுதியில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 350 என மொத்தம் ரூ.10 லட்சத்து 7 ஆயிரத்து 140 திருப்பி தரப்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 210 கொடிகள் மற்றும் 95 டி-ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story