பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி மும்முரம்


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 March 2021 10:49 PM IST (Updated: 22 March 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் தேர்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி,தெய்வானை சமேத முருகப் பெருமான் திருமணகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தேர் தயார் செய்யும் பணி

இதையொட்டி, தற்போது தேர்கள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள விநாயகர், முருகன் தேர்களை சுத்தம் செய்தும், தேர் சக்கர அச்சுக்களை சரி செய்து, வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

 மேலும் தேர்களின் மீது மேடை அமைத்து நீண்ட கம்பங்களை கொண்டு கோபுரம் அமைக்கும் பணிகளையும் கோவில் பணியாளர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். இப்பணியை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பார்வையிட்டார்.

Next Story